மத்திமநாட்டில் வாரணம் (ஸ்ரீ வாரணாசி) என்னும் ஊர் இருப்பதாக இளங்கோ கூறுகிறார். மிக்கோனால் கொடுக்கப்பட்ட குரங்கு இறந்து, பின் மத்திமதேசத்து வாரணவாசி என்னும் நகரில் உத்தர கெளத்தன் என்னும் அரசனுக்கு மகனாய்ப் பிறந்தது.
“காதற் குரங்கு கடை நாளெய்தவும்
தானஞ் செய்வுழி யதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திமநன்னாட்டு வாரணந்தன்னுள்
உத்தர கெளத்தற் கொருமகனாகி” (சிலப், 15:175 178)