இடைச்சங்க காலத்தவராகக் கருதப்படும் இப்புலவர் இயற்றிய நாடக நூல்,இவர் பெயரால் மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் எனப்படும். அடியார்க்குநல்லார் உரையியற்ற உதவிய நாடகநூல்களுள் இதுவும் ஒன்று. (சிலப்.உரைப்பாயிரம்)