மதங்கியார்

கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள்ஒன்று. மதங்கர் என்பார் இசைக்கும் கூத்திற்கும் உரிய ஒரு சாதியார்.அச்சாதியைச் சார்ந்த பெண் ஒருத்தி இரு கைகளிலும் இரண்டு வாள்களை ஏந்திவீசிப் பாடி ஆடும் அக்காட்சியைக் கண்ட காமுகன் ஒருவன் அவளது பேரழகில்ஈடுபட்டு மனத்தைப் பறிகொடுத்து அவள்அழகு தன்னை வருத்திற்றாகக் கூறும்செய்தி அமைந்த அகப்புறக் கைக்கிளைத்துறைப் பாடல் இது.(மதங்கி – ஆடல் பாடல்களில் வல்ல பதினாறு வயதுப் பெண்) (மதுரைக் கல.16)