மணிரங்கம்

இது வடமொழி விருத்தங்களுள் ஒன்று. இதன் அமைப்பு : முதலில் குருவும்இடையில் இலகுவும் ஈற்றில் குருவும் கொண்ட ஒரு கணமும், அடுத்து,முதற்கண் இலகுவும் இடைக்கண் குருவும் இறுதிக்கண் குருவும் கொண்டகணமும், அடுத்தும் அதே கணமும், இறுதியில் ஒரு குருவும் நிற்பது.எ-டு : ‘வீரத் திண்டிறல் மார்பினில் வெண்கோடாரக் குத்திய ழுந்திட நாகம்வாரத் தன்குலை வாழை மடற்சூழ்ஈரத் தண்டென இற்றன வெல்லாம்’ (கம்பரா. 6285) (வி. பா. பக்.42)