மணிமாலை விருத்தம் (1)

எழுசீர்ச் சந்த விருத்தம்; 1, 3, 5ஆம் சீர்கள் குறிலீற்றுப்புளிமாங்காய், 2, 4, 6ஆம் சீர்கள் குறிலீற்றுத் தேமா; 7ஆம் சீர்புளிமா என்றமைந்த எழுசீரடி நான்கான் நிகழ்வது.அ) நேரசையில் தொடங்குவது :எ-டு : ‘இத்தன்மை யெய்தும் அளவின்க ணின்ற இமையோர்க ளஞ்சிஇதுபோய்எத்தன்மை யெய்தி முடியுங்கொ லென்று குலைகின்ற எல்லை இதன்வாய்அத்தன்மை கண்டு புடைநின்ற அண்ணல் கலுழன்த னன்பின் மிகையால்சித்தங்க லங்கு மிதுதீர மெள்ள இருளூடு வந்து தெரிவான்!’(கம்பரா. 8244) (வீ. பா. பக். 81)ஆ) நிரையசையில் தொடங்குவது :எ-டு : துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னுசுடரோன் ஒளிமண்டி யும்பர் உலகங்க டந்த உமைபங்க னெங்க ளரனூர்களிமண்டு சோலை கழனிக்க லந்த கமலங்கள் தங்கு மதுவின்தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.(தே. II 88-1) (வி. பா. பக். 70)இ) புளிமாவும் கருவிளமும் மும்முறை அடுக்கிவர இறுதியில் நீண்டகருவிளம் (அல்லது புளிமாங்காய்) வரும் எழுசீரடிகள் நான்கான் நிகழ்வது:எ-டு : ‘இனியின் றொழிமினிவ் வெறியு மறியடு தொழிலு மிகுகுரவையுமெலாம்நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர் நசையுண் டதுநரைமுதுபெண்டீர்புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ் விரகன் புயமுறு மரவிந்தம்பனிமென் குழலியை அணிமின் துயரொடு மயலும் கெடுவதுசரதம்மே’.(ஆளுடை : திருக். 22)ஈ) இத்தகைய பாடலில் இறுதிச்சீர் தேமா ஆவது.எ-டு : ‘சயமி குத்தகு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் கீதன்கயலு டைப்புனல் வயல்வ ளந்தரு கழும லப்பதி நாதன்இயலு டைக்கழ றொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே!’ (ஆளுடை.திருக் பக். 72)2) தேமா, கூவிளங்காய், தேமா, கூவிளங்காய், தேமா கூவிளங்காய்,கூவிளம் எனவரும் எழுசீரடி நான்கான் நிகழ்வது.எ-டு : நீல நின்றதொரு நீல மால்வரைநெ டுந்த டக்கையினிடந்துநேர்மேலெ ழுந்தரிவி சும்பு செல்வதொரு வெம்மையொடு வரவீசலும்சூல மந்தகனெ றிந்த தன்னதுது ணிந்து சிந்தவிடைசொல்லுறும்கால மொன்றுமறி யாம லம்புகொடு கல்லி னானெடிய வில்லினான். (வி.பா.ப. 84)