மணிகள் கிடைத்த தீவையே மணிமேகலை மணிபல்லவம் என்று அழைத்துள்ளது. ஈழநாட்டில் தான் சிறந்த மணிகள் நிறையக் கிடைத்தன. ஈழநாடு அல்லது ஈழநாட்டின் பகுதியே மணிபல்லவம் எனக்கருத இடமளிக்கிறது. மணிபல்லவம் என்பது ஒரு சிறு தீவு. சோழநாட்டின் தலை நகராக முன்னரிருந்த காவிரிம்பூம்பட்டினத்திற்குத் தெற்கே முப்பது யோசனை தொலைவில் உள்ளது. தன்னை வணங்கிய வர்கட்குப் பழம் பிறப்பின், செய்தியைத் தெரிவிக்கும் புத்த பீடிகை யொன்றும், கோமுகி என்னும் பொய்கையும் இத்தீவி விருந்தன.
“அந்தரமாறா ஆறைந்தி யோசனைத்
தென்றிசை மருங்கிற் சென்று திரையுடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணியிழைதன்னன வைத்தகன்றது” (மணிமே. 6;211 214)
“மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி” (௸. 7:1 2)