மணலி

சேக்கிழார் நமி நந்தியடிகள் புராணத்தில் சுட்டும் ஊர் இது. இன்று திருவொற்றியூரின் அருகே மணலி என்றொரு ஊர் காணப்படுகிறது. ஆயின், இங்குச் சுட்டப்பட்ட மணலி, திருவாரூருக்குத் தென் மேற்குப் பகுதியில் உள்ளது என அறிகின்றோம். எனவே இந்த மணலி திருவாரூர்க்குப் பக்கத்தில் உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் இவ்வூர் இன்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சென்னையைச் சார்ந்த மணலி, கடற்கரைப் பகுதியாக இருக்கும் நிலையில், மணலே திருவாரூர் அருகே உள்ள மணலிக்கும் அடிப்படையாக அமைந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.