மணமேற்குடி

சேக்கிழார் குலச் சிறையாரின் ஊர் பற்றிப் பேசும் போது,
பன்னு தொல் புகழ்ப்பாண்டி நன்னாட்டிடைச்
செந்நெலார் வயல் தீங்கரும்பின் னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மணமேற்குடி (1)
என இவ்வூரினைச் சுட்டுகின்றார். எனவே மணமேற்குடி என்பது அன்று பாண்டி நாட்டில் இருந்ததொரு ஊர் என்பது தெளிவு. மேலும், சம்பந்தர் இங்குச் சென்ற தன்மையையும் நாம் சேக்கிழார் வாயிலாகத் தெரிய வருகிறோம்.
திருத்தொண்டர் பலரும் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்வ மந்திரியார்
பதி மணமேற் குடியில் வந்தார் (892)
இவரது பாதையை எண்ணுமபோது. பாண்டிய நாட்டில் தலங்கள் சிலவற்றைத் தரிசித்து விட்டு, பின்னர் சோழ நாட்டுக்குச் செல்லும் வழியில் இங்குச் செல்கின்றமையைச் காண்கின்றோம். எனவே பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டிற்கும் இடைப் பகுதியில் பாண்டிய நாட்டுப் பகுதியில் அமைந்தது இத்தலம் என்பது புரிகிறது. சிறந்த வளமுடையது என்பது சேக்கிழாரின் பாடல் (குலச் -1) வழி புலனாகும் போது மணமே இதற்கும் காரணமோ என்ற எண்ணம் எழுகின்றது. ஆயின் மணல் மேடு அமைந்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி யென்ற நிலை யிலும் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இக் கருத்திற்கு, குருந்தவிழ் சாரல் மணமேற்குடி மன் சிறையே என்ற நம்பியாண்டார் கருத்து (திருத்தொண்டர் -26) அரணாகிறது. சாரல் மலைப் பகுதியைக் குறிக்கும் நிலையில் நில மேட்டு நிலையே பெரும்பான்மை ஆதரவு பெறுகிறது. குலச்