உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதனால் வகுப்புறப் பாடுவதொருபிரபந்தம். (வகுப்பு – சந்தப் பொலிவு.)(இ. வி. பாட். 68)வெண்பா ஒன்பதனாலும் வகுப்பு ஒன்பதனாலும் என இரு வகையாகப் பாடுதலைச்சதுரகராதி சுட்டுகிறது. அக்கருத் துக்கு வகுப்புச் சந்தவிருத்தத்தைக்குறித்தல் அமையும். (இ. வி. பாட். 68)