மங்கலச் சொற்கள்

சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை,யானை, கடல், நிலை, மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ்,நிலம், ஆரணம், கடவுள், திகிரி என்பனவும் பிறவும் அகலக்கவியின்முதற்கண் நிற்கும் மங்கலச் சொற் களாம்.‘பிற’ என்றதனால், வாழி, மாலை, சங்கு, தார், விசும்பு, கவி, கயல்,சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு, மலர், பழனம், இடபம்என்பனவும், செல்வம், சீர்த்தி, கீர்த்தி, ஞாயிறு, புயல், புனம்,வேழம், களிறு, பரி, மதியம், தீபம் முதலிய பரியாயச் சொற்களும்கொள்ளப்படும். (இ. வி. பாட். 11)எவ்வெம் மங்கலச்சொற்கள் எவ்வெம் முதலெழுத்துக்களை யுடையசொற்களுக்கு உரிய என்பது வரையறுத்த பாட்டியல் குறிப்பிடும்.க, கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ, யா, வ, வா, வி, வீ -என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்குஏற்ற மங்கலச்சொல் ‘சீர்’ என்பது. நு, நூ, யூ – இவற்றை முதலாகக் கொண்டதலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘எழுத்து’ என்பது. (சூ. 4).கு, கூ, சௌ, து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மெ, மே, மொ, மோ, மௌ-என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்குஏற்ற மங்கலச் சொல் ‘பொன்’ என்பது. கௌ, சை, ம, மா, மி, மீ, மு, மூ, வை,வெள – இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல்‘பூ’ என்பது (சூ. 5).கொ, கோ – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்குத் ‘திரு’என்பதும் ‘திங்கள்’ என்பதும், கெ, கே, எனும் எழுத்தால் தொடங்கும்தலைவர் பெயர்களுக்கு ‘மணி’ என்பதும், கை, சி, சீ, தி, தீ, தை, நொ, பை- எனும் எழுத்தால் தொடங்கும் பெயர்களுக்கு ‘நீர்’ என்பதும் மங்கலச்சொற்களாம். (சூ. 6).ஓள, சு, சூ, செ, சே, தௌ, நௌ – எனும் எழுத்தால் தொடங் கும் தலைவர்பெயர்களுக்குக் ‘கங்கை’ என்பதும், ஞெ, ஞொ எனும் எழுத்தால்தொடங்குவனவற்றிற்கு ‘வாரணம்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 7)இ, ஈ, ஞா – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர் களுக்குக்‘குஞ்சரம்’ என்பதும், ப, பா எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு‘உலகு’ என்பதும், ச, சா, பெ, பே, பொ, போ, வெ, வே எனும் எழுத்தால்தொடங்குவனவற் றிற்குப் ‘பார்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ.8)உ, ஊ, எ, ஏ, ஐ, நை, மை – எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர்பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘தேர்’ என்பது (சூ. 9).சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை,சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன் என்னும் இவைபதினெட்டும் இவற்றின் பரியாயப் பெயர்களும் ஆம். (ஆ.நி. xii – 18)