மக என்ற பெயர் புணருமாறு

மக என்ற இளமைப் பெயர் இன்சாரியையும் அத்துச் சாரியை யும் பெற்றுப்புணரும். இன்சாரியை பெறுதல் பெரும் பான்மை.எ-டு : மக+இன்+கை,ஞாண்,வட்டு,ஆடை=மகவின் கை,மகவின் ஞாண்;மகவின்வட்டு, மகவினாடை ; மக+அத்து+கை=மகத்துக்கை;மக+பால்+யாடு= மகப்பால்யாடு, மகம்பால்யாடு-என வலித்தலும்மெலித்தலும் பெற்று வருதலு முண்டு. (தொ. எ. 218, 219 நச். உரை)