மகர ஈற்று நாட்பெயர் ஆன்சாரியை பெறுவதற்கு முன் அத்துச் சாரியையும்பெற்று வருமொழி வினை நாற்கணத் தொடும் புணரும்.எ-டு : மக+ அத்து+ ஆன் – மகத்தாற் கொண்டான், மகத் தான்ஞாற்றினான், மகத்தான் வந்தான், மகத்தா னடைந்தான்இதற்கு ஏழனுருபு விரித்து மகத்தின்கண் என்று பொருள் செய்யப்படும்.(தொ.எ.331 நச்.)மகர ஈற்றில் அமைந்த நாள்களின் பெயர்கள் மிருகசீரிடம், புனர்பூசம்,பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், விசாகம், அனுடம்,மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம், சதயம் எனப்பதினாறாம்.இப்பெயர்கள் நிலைமொழிகளாக வருமொழிக்கண் வினைச் சொல்வரின், இடையேஅத்துச்சாரியையும் ஆன்சாரியையும் வரும். வருமொழி வன்கணம் வரின்,ஆன்சாரியையின் னகரம் றகரமாகும்.