மகரஇறுதிப் பெயர் அல்வழிக்கண் ஈற்றுமகரம் கெட்டு வருமொழிவல்லெழுத்துக்கு ஏற்ப இனமெல்லெழுத்து மிக்கு முடியும்.எ-டு : மரங் குறிது, மரஞ் சிறிது,மரந் தீது, மரம் பெரிது-எனக்காண்க. மரம் பெரிது என்புழித் திரிபுஇன்று என்பது ஆணை கூறலாம். (தொ.எ. 314 நச். உரை)வட்டத்தடுக்கு, சதுரப்பலகை, ஆய்தப்புள்ளி, வேழக்கரும்பு,நீலக்கண்-என்னும் பண்புத்தொகைக்கண் நிலைமொழியீற்று மகரம் கெட்டுவருமொழிமுதல் வல்லெழுத்து மிக்கு முடிந்தன.ஆய்த உ(வு)லக்கை, அகர முதல – இவை இயல்புகணத்தின் கண் மகரம் கெட்டுமுடிந்தன.செல்லுங் கொற்றன், உண்ணுஞ் சோறு; கவளமாந்து மலைநாடன், பொரு மாரன்,தாவு பரி, பறக்கு நாரை, அடு போர், வருகாலம்;கொல்லும் யானை, பாடும்பாணன் – இவை முறையே மகரம் திரிந்தும், கெட்டும், நிலைபெற்றும் வந்தபெயரெச்சம் (பெயரெச்சத் தொடர்).கலக்கொள், கலச்சுக்கு, கலத்தோரை கலப்பயறு – இவை அளவுப் பெயர்க்கண்மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கன.எல்லாக் கொல்லரும், எல்லாப் பார்ப்பாரும் – என இவை மகரம் கெட்டுவலிமிக்கன.பவளவாய் – என உவமத்தொகைக்கண்ணும், நிலநீர் என எண் ணிடத்தும் மகரம்கெட்டது.மர ஞான்றது, மர நீண்டது, மர மாண்டது ‘உரையசைக் கிளவியு ஞாங்கர்’(எ.204 நச்.),அதன்குண நுதலி’ (சொ. 416)- என இயல்புகணத்துக்கண் மகரம்கெட்டது. (314 நச்.)மரம் யாது, மரம் வலிது, மரமடைந்தது – என இயல்பு கணத்துக்கண் மகரம்கெடாது நின்றது. (தொ.எ. 314)அகம்+ கை – ககரம் கெட்டு மகரமும் கெட்டு, மெல்லெழுத்து மிக்குஅங்கை – என முடிந்தது. – 315இலம்+படு = இலம்படு – என இயல்பாகப் புணர்ந்தது – 316ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று – என ஆயிரம் அத்துப் பெற்றது. -317அஃது அடையடுத்த இடத்தும் பதினாயிரத்தொன்று – என்றாற் போல அத்துப்பெற்றது. – 318ஆயிரம் + கலம், சாடி = ஆயிரக்கலம், ஆயிரச் சாடி – என மகரம் கெட்டுவலி மிக்கது. – 319நும் என்பது அல்வழிக்கண் நீஇர் – எனத் திரிந்தது. -326மகர ஈற்றுத் தொழிற்பெயர் செம்முக் கடிது, செம்மு ஞான்றது – என்றாற்போல உகரம் பெற்றது. -327ஈம், கம், உரும் – என்ற பெயர்கள் உகரம் பெற்று ஈமுக்கடிது என்றாற்போல வந்தன. – 328