மகர ஈற்றுப் பொதுவிதி

மகரஈற்றுச் சொற்கள் வருமொழியொடு புணருமிடத்து, இறுதி மகரம் கெட்டுவிதி உயிரீறாய் நின்று, இயல்பு உயிரீறு போல், வருமொழி முதற்கண்உயிர்வரின் உடம்படுமெய் பெற்றும், வன்கணம் வரின் அவ்வல்லினமெய்மிக்கும், மென் கணமும் இடைக்கணமும் வரின் இயல்பாகவும் புணரும்;வன்கணம் வருமிடத்தே கெடாது வந்த வல்லினத்துக்கு இனமான மெல்லினமெய்யாகத் திரிதலும் ஆம்.எ-டு : வட்டம் +ஆழி > வட்ட +ஆழி > வட்ட+ வ் +ஆழி = வட்டவாழி; வட்டம் + கடல் > வட்ட +கடல் > வட்ட+க் + கடல் = வட்டக்கடல்; வட்டம் + நேமி > வட்ட + நேமி = வட்டநேமி; வட்டம் + வாரி > வட்ட + வாரி = வட்டவாரிஇவை அல்வழிப் புணர்ச்சிமரம்+ அடி > மர + அடி > மர + வ் + அடி = மரவடி; மரம் + கால் > மர + கால் > மர + க் + கால் = மரக்கால்; மரம்+ நார் > மர + நார் = மரநார்; மரம் + வேர் > மர + வேர் = மரவேர்இவை வேற்றுமைப் புணர்ச்சி.நாம் + கடியம்= நாங் கடியம் ; அடும் + களிறு= அடுங் களிறு -அல்வழி; நம் + கை = நங்கை – வேற்றுமை. (நன். 219)