மகர ஈற்று நிலைமொழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்தேமகரஈறு கெட, வருமொழி வல்லெழுத்தோ அதன் இன மெல்லெழுத்தோ மிக்குமுடியும். அல்வழிக்கண் உயிரும் இடைக்கணமும் வரின், நிலைமொழி ஈற்றுமகரம் கெடாது இயல்பாக முடிதலுமுண்டு.எ-டு : குளம்+ கரை= குளக்கரை, குளங்கரை – வேற்றுமைகுளம் +அழகிது, யாது = குளமழகிது, குளம் யாது – அல்வழி (நன்.220)நும் தம் எம் நம் – என்பவற்று ஈற்று மகரம் வருமொழி முதலில் ஞகரமோநகரமோ வருமிடத்து அவ்வம் மெய்யாகத் திரியும்.நும், தம், எம், நம் +ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண், எஞ்ஞாண்,நஞ்ஞாண்+ நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்வருமொழி முதலில் மகரம் வருமிடத்து நிலைமொழியீற்று மகரம் இயல்பாகப்புணரும்.நும் +மணி = நும்மணி; பிறவும் கொள்க. (நன். 221)அகம் என்னும் நிலைமொழி முன்னர் வருமொழியாகச் செவி – கை – என்பனவரின், அகங்கை – அகஞ்செவி – எனப் பொது விதியால் முடிதலே அன்றி,நிலைமொழியிடையேயுள்ள ககர உயிர்மெய் கெட, அம்+ செவி = அஞ்செவி, அம்+கை= அங்கை – என முடியும்.அஞ்செவி, அங்கை – என்பன இலக்கணப்போலியாய்த் தழாஅத் தொடராம்.அகம்+சிறை = அஞ்சிறை – எனப் புணர்த்தலும் ஈண்டுக் கொள்ளப்படும்.(நன். 222 சங்.)ஈம், கம், உரும் – என்பன, தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத ஏனையமெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். ஈமும் கம்மும்வேற்றுமைக்கண் உகரச் சாரியையே அன்றி அகரச்சாரியையும் பெறும்.எ-டு : ஈமுக் கடிது, ஈமு நீண்டது, ஈமு வலிது; கம்முக் கடிது,கம்மு நீண்டது, கம்மு வலிது; உருமுக் கடிது, உருமு நீண்டது, உருமுவலிது – இவை அல்வழி.ஈமுக்கடுமை, ஈமுநீட்சி, ஈமுவன்மை; கம்முக்கடுமை, கம்முநீட்சி,கம்முவன்மை; உருமுக்கடுமை, உருமு நீட்சி, உருமுவன்மை – இவைவேற்றுமை.ஈமக்குடம், கம்மக்குடம்- வேற்றுமையில் அகரச்சாரியைப் பேறு.(ஈமத்துக்குரிய குடம், கம்மியரது தொழிலால் சமைத்த குடம் – எனப்பொருள் செய்க.) (நன். 223)