‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்தனகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்பபுகரறக் கிளந்த அஃறிணை மேன’ (தொ. மொழிமரபு 49)என்று எகின் – செகின் – எயின் – வயின் – குயின்- அழன்- புழன்-புலான்- கடான்- என வரும் ஒன்பதும் மயங்காதன எனக் கொள்ளின், பலியன் -வலியன்- வயான் – கயவன்- அலவன்- கலவன்- கலுழன் – மறையவன்- செகிலன்-முதலாயினவும் மயங்கப்பெறா – என மறுக்க. (நன். 121 மயிலை.)இம்மயக்கம் ஏற்புழிக்கோடலான் குறிலிணையை அடுத்த னகரம் பற்றியதே.(இல. சூறா. ப. 65.)