‘உறழா நடப்பன உளவே’ எனவே, உறழாதன பெரும் பான்மையவாம். அவை வட்டம்பட்டம் குட்டம் மாடம் கூடம் கடாம் படாம் கடகம் சடகம் நுகம் மகம் ஆரம்பூரம் உத்தரம் வீக்கம் நோக்கம் ஊக்கம் – என்றல் தொடக்கத்தன. (நன். 121மயிலை.)உறழாதன பெரும்பால என்க. அவை வட்டம், குட்டம், மாடம், கூடம்-முதலாயின. (நன். 122 சங்கர.)