மகரம் த வ ய ஆதல்

பண்பான சொற்களின் இடையே நின்ற மகரம் திரிந்து தகர வகர யகரமாகவும்பெறும் என்றார் நேமிநாத ஆசிரியர்.வரலாறு: செம்மை என நிறுத்தி ஆம்பல் என வருவித்து, ‘ஆங்கு உயிர்மெய்போம்’ என்பதனால் மகர ஐகாரத்தை அழித்து, ‘மகரம் தவய ஆம்’ என்பதனால் மகரஒற்றைத் தகரமாக்கி, முதல் உயிரை நீட்டி, ‘செம்மை உயிர் ஏறும்செறிந்து’ என்பதனால் தகர ஒற்றிலே உயிரை (ஆ)ஏற்றிச் சேதாம்பல் – எனமுடிக்க.செம்மை என நிறுத்தி அலரி – ஆடை – என வருவித்து, மகர ஐகாரத்தைஅழித்து, முன்நின்ற மகரஒற்றை வகரம் ஆக்கிக் ‘குற்றொற்று இரட்டும்’என்பதனால் வகர ஒற்றை இரட்டித்து, ‘ஒற்றுண்டேல் செம்மை உயிர் ஏறும்செறிந்து’ என்பதனால் வகர ஒற்றில் உயிரை ஏற்றிச் செவ்வலரி- செவ்வாடை -என முடிக்க.ஐம்மை என நிறுத்தி அரி என வருவித்து, மகர ஐகாரத்தைக் கெடுத்து, மகரஒற்றை யகரம் ஆக்கி யகர ஒற்றில் உயிரை (அ) ஏற்றி, ஐயரி – எனமுடிக்க.பண்பீற்று நிலைமொழியில் மகரம் தகர வகர யகரம் ஆவது வருமொழிக்குமுதலாக உயிர்வரின் – என அறிக.(நேமி. எழுத். 18 உரை)