மகரக் குறுக்கம்

பத்துச் சார்பெழுத்துக்களுள் ஒன்று. லகர ளகரங்கள் திரிந்த னகர ணகரமெய்களை அடுத்து வரும் மகரம் தன் இயல்பான அரைமாத்திரையிற் குறுகிக்கால்மாத்திரையாக ஒலிக்கும். நிலைமொழி ஈற்று மகர மெய்யின் முன்னர் வகரமுதல் மொழி வருமாயினும் அவ்விருமொழிப் புணர்ச்சிக்கண் நிலைமொழி ஈற்றுமகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாம்.இவ்வாறுஇடவகையால் மகரக்குறுக்கம் மூன்றாயிற்று.வருமாறு : ‘திசையறி மீகானும் போன்ம்’ (போலும் > போல்ம் = போன்ம்) ‘மயிலியல் மாதர் மருண்ம்’ (மருளும் > மருண்ம்= மருண்ம்)தரும் வளவன் (செய்யுமென்னும் வாய்பாட்டது நிலைமொழி என்க.)(நன்.96)