‘அரையளவு குறுகல்’ என்பதன் பொருள், (மகரம்) தன் இயற்கை (அரை)மாத்திரையின் அரையளவாகக் குறுகுதல் என்பது. (எ.கு.பக். 22)வேறோர் எழுத்தினது ஓசையால் மகரம் குறுகுதல். மகரம் குறுகுதல்இயற்றமிழுக்கும் உரியதாதலின், இது பிறன்கோட் கூறல் ஆகாது.சார்பெழுத்தாவது மற்றொரு முதலெழுத்தைச் சார்ந்து அதன் பிறப்பிடமே தன்பிறப்பிடமாகக் கொள்வ தாம். குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் – என்றமூன்றுமே அந் நிலையின ஆதலின், தமக்கெனத் தனிப் பிறப்பிடத்தை யுடையஉயிர்மெய் முதலியன சார்பெழுத்தாகா. (எ.கு. பக். 23)