‘மகரக்குறுக்கம் இசையிடன் அருகும்’ (தொ. எ. 13). என்றுகூறப்பட்டுள்ளது. ‘இசையிடன்’ என்பதற்கு வேறோர் எழுத்தின் ஓசையின்கண்’என்பதே பொருள். பேராசிரியர் இசை நூலின்கண் என்று பொருள் கொண்டு,இதனைப் பிறன்கோட்கூறல் என்னும் உத்திக்கு உதாரணமாகக் காட்டி னார்.ஆசிரியர் இசைநூலிடத்தின்கண் – எனத் தெளிவாகக் கூறாமையானும்,மகரக்குறுக்கம் இயற்றமிழின் கண் வருவ தோர் இலக்கணம் ஆகையானும்,மகரக்குறுக்கம் பற்றிய செய்தி பிறன்கோட் கூறல் ஆகாது. (எ.ஆ. பக்.19)