மகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வரின், மகர ஈறு கெட வருமொழிமுதலில் வந்த வல்லொற்று இடையே மிகும்.எ-டு: மரக்கோடு, மரப்பூ, முண்டகக் கோதைஇயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப்பெயர்க்கண்ணும்விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்ளப்படும்.எ-டு: மரஞாண், மரநூல் – மகரம் கெட்டது. இவை நான்கன்தொகை. மரமணி,மரயாழ், மரவட்டு, மரவுரல் – மகரம் கெட்டது. நங்கை, எங்கை, தங்கை – நம்எம் தம் – என்பனவற்றின் மகரம் கெட்டு இன மெல்லெழுத்து மிக்கது. (தொ.எ. 310 நச்.)வருமொழியில் அகரமும் ஆகாரமும் முதலில் வருமிடத்து மகர ஒற்றுக்கெட்டு ஈற்றில் நின்ற அகரம் நீண்டு முடிதலும் நீடாமையும் உரியது.ஆகாரம் அகரமாகிவிடும்.எ-டு:மரம் +அடி= மராஅடி, மரவடி; குளம் + ஆம்பல் =குளாஅம்பல்,குளவாம்பல் (தொ.எ.311 நச்.)கோணம் +கோணம் =கோணாகோணம்; கோணம் + வட்டம் = கோணா வட்டம்இவை ஏழன்தொகை.மகர ஈற்றுப் பெயர் மகரம் கெடுதலொடு வலிமெலி மிகுதலும் உரித்து.எ-டு : குளக்கரை, குளங்கரை – வலிமெலி உறழ்வு.குளத்துக் கொண்டான், ஈழத்துச் சென்றான், குடத்து வாய்,பிலத்துவாய் – என மகரம் கெட்டு அத்துப் பெறுதலுமுண்டு.‘புலம் புக்கனனே, ‘கலம் பெறு கண்ணுளர்’ – என இயல்பாதலு முண்டு.(312 நச். உரை)இல்லம் என்ற மரப்பெயர் மகரம் கெட்டு மெல்லெழுத்துப் பெறும்.எ-டு: இல்லங்கோடு, இல்லஞ்செதிள் (312 நச். உரை)தாம் யாம் நாம் – என்பன தம் எம் நம் – என முதல் குறுகி ஈறு கெட்டுஇனமெல்லெழுத்து மிகும்.எ-டு : தங்கை, எங்கை, நங்கை, தஞ்செவி… தந்தலை…..எல்லாரும் எல்லீரும் என்பனவும் எல்லார்தங்கையும்,எல்லீர்நுங்கையும் – என முடியும். இஃது எல்லார்தம் மணியும் என்புழிமகரம் கெடாது உம்முப் பெற்றது. எல்லீர்நும்மணியும் என்புழியும்அது.தமகாணம், நுமகாணம், எமகாணம் – என அகரச்சாரியை பெறுதலும், நும்என்பதும் நுங்கை, நுஞ்செவி – என்றாற் போல மகரம் கெட்டு இனமெல்லெழுத்துமிகுதலும் கொள்க. (320, 325 நச். உரை)எல்லாம் என்பது, எல்லாநங்கையும் எல்லாநஞ்செவியும் – என மகரம்கெட்டு நம்முச்சாரியை ஈறு வருமொழி வன்கணத்துக்கு ஏற்பஇனமெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். (324 நச். உரை)ஈம் கம் – என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் அக்குச்சாரியை பெற்றுப்புணரும்.எ-டு : ஈமக்குடம், கம்மக்குடம் (329 நச்.)தொழிற்பெயர்கள், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வன்கணம் வந்துழிஉகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக் கணத்து வகரமும் வந்துழிஉகரமும், யகரமும் உயிரும் வந்துழி இயல்பும் பெற்றுப் புணரும்.எ-டு : தும்முக் கடிது; தும்மு நீண்டது,தும்மு வலிது, தும்யாது, தும் மிது. (327 நச்.)(தனிக்குறில் முன் ஒற்று இரட்டுதல் இயல்பாம்.)நாட்டக்கடுமை, ஆட்டக்கடுமை – தொழிற்பெயர் மகரம் கெட்டுவல்லெழுத்து மிக்கது.(327 நச். உரை)நாட்பெயர்கள் அத்தும் ஆனும் பெற்றுப் புணரும்.எ-டு : மகம்+ அத்து+ஆன்+ கொண்டான் = மகத்தாற் கொண்டான் (மகம்என்ற நாளின்கண் கொண்டான் – என்பது பொருள்.) (331 நச்.)