தாய் என்னும் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாகஒருவன் கூறுமிடத்து, யகர ஈற்றுப் புணர்ச்சியாய், வல்லெழுத்து வருமொழிமுதலில் வந்துழி, அவ்வல்லெழுத்து மிக்கு முடியும்.எ-டு: மகன் றாய்க் கலாம் – மகன் தாயொடு கலாய்த்த கலாம்மகன் றாய்ச்செரு – மகன் தாயொடு செய்த செருமகன் றாய்த் துறத்தல் – மகன் தாயைத் துறத்தல்மகன் றாய்ப் பகைத்தல் – மகன் தாயைப் பகைத்தல்- என வேற்றுமைவழிப் பொருள் கொள்ளப்படும்.வினை: ஈண்டுப் பகைமேற்று. நச். (தொ. எ. 359 நச்.)மகன்வினை – மகற்குத் தாயான் பயன்படு நிலைமையன்றி அவ ளொடு பகைத்தநிலைமையைக் குறித்தல். (360 இள. உரை)