மகதநாடு

மகதநாடு தருக்கனுடைய நாடு. இதன்‌ தலைதகர்‌ இராச கிரியம்‌, இந்நாட்டிற்‌ பிறந்தவர்களான இரத்தின வேலைக்‌காரர்கள்‌ திறமை வாய்ந்தவர்கள்‌. வச்சிரம்‌, அவந்தி, மகதம்‌ என்ற இந்நாடு மூன்றும்‌ உடையோர்‌ திறையிட்ட பந்தர்‌, தோரணவாயில்‌, பட்டிமண்டபம்‌ இவை கூடிய மண்டபம்‌ ஒன்றைச்‌ சிலப்பதிகாரம்‌ குறிக்கின்றது. மகத நாட்டின்‌ முக்கிய நகரமாகக்‌ கபிலையைக்‌ குறிக்‌கின்றது மணிமேகலை.
“மாநீர்‌ வேலி வச்சிர நன்னாட்டுக்‌
கோனிறை கொடுத்த கொற்றப்‌ பந்தரும்‌
மகத நன்னாட்டு வாள்வாய்‌ வேந்தன்‌
பகைபுறத்துக்‌ கொடுத்த பட்டிமண்டபமும்‌
அவந்தி வேந்த னுவந்தனன்‌ கொடுத்த
நிவந்தோங்கு மரபின்‌ தோரணவாயிலும்‌”* (சிலப்‌. 1:5:99 104)
”தும்பை வெம்போர்ச்‌ சூழ்கழல்‌ வேந்தே
செம்பியன்‌ மூதுரர்ச்‌ சென்று புக்காங்கு
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்திருக்க வேந்தன்‌
அமரகத்‌ துடைந்த வாரிய மன்னரொடு
தமரிற்‌ சென்று தசையடி வணங்க” (௸. 3:28: 84 89)
“மகத வினைஞரு மராட்டக்‌ கம்மரு
மவந்திக்‌ கொல்லரும்‌ யவனத்தச்சரும்‌
தண்டமிழ்‌ வினை ஞர்‌ தம்மொடு கூடிக்‌
கொண்டினி தியற்றிய கண்கவர்‌ செய்வினைப்‌
பவளத்‌ திரள்காற்‌ பன்மணிப்‌ போதிகைத்‌
தவள நித்திலத்‌ தாமந்‌ தாழ்ந்த
கோணச்‌ சந்தி மாண்வினை விதானத்துத்‌
தமனியம்‌ வேய்ந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப்‌ பசும்‌ பொன்‌ மண்டபத்‌
தந்திர திருவன்‌ சென்றினி தேநலும்‌” (மணிமே. 19 : 107 116)
”கச்சி முற்றத்து நின்னுயிர்‌ கடைகொள
உத்தர மகதத்‌ துறு பிறப்பெல்லா
மாண்பிறப்பாகி யருளற மொழியாய்‌” (௸. 21: 174 179)
“மறந்து மழைமாறா மகத நன்னாட்டுக்‌
கொரு பெருந்‌ திலகமென்‌ றுரவோருரைக்குங்‌
கரவரும்‌ பெருமைக்‌ கபிலையம்பதியின்‌ (௸. 2 ; 42 44)
“மகதத்துப்‌ பிறந்துமணிவினைக்காரரும்‌ (பெருங்‌1: 58 : 41)
”மன்பெருஞ்சிறப்பின்‌ மகத நன்னாடு
சென்று சார்ந்தனராற்‌ செம்மலொடொருங்கென்‌”‌ (௸.3;2:54 55)
”அளவி லாற்றலச்சுவப்‌ பெருமகன்‌
மகதம்‌ புகுந்து மன்னிய செங்கோற்‌
றகைவெந்துப்‌ பிற்‌ றருசகற்‌ கிசைப்ப” (௸.3;16; 10 12)