மஃகான் புள்ளியீறு பெறும் சாரியைகள்

மகரஈறு அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வருமொழியாகும்உருபுகளொடும் பெயர்களொடும் புணரும்.எ-டு : மரம்+ஐ > மரம்+அத்து+ஐ=மரத்தை; மரம் + அத்து + இன் + ஐ =மரத்தினை.மரம்+கோடு > மரம் + அத்து + கோடு = மரத்துக்கோடு; மரம் + அத்து + இன் + கோடு= மரத்துக்கோடு. (தொ.எ. 185, 186 நச்.)