உண்ணாகிடந்தான் – உண்ணாவிருந்தான் என, ஆகிடந்து – ஆவிருந்துஎன்பனவும், வருதி – பெயர்தி – வருந்துதி – பொருதி – புலம்புதி – எனத்தகரஒற்றும், உண்பல் – வருவல் – எனவும் நோக்குவேற்கு – உண்பேற்கு -எனவும் முறையே வினையும் வினையாலணையும் பெயரும் ஆகிய இவற்றில் பகர வகரஒற்றுக்களும், சிறுபான்மை நிகழ்காலம் காட்டும். (நன். 143 இராமா.)