திரிந்த புணர்ச்சிகள் மூன்று. அவை மெய் பிறிதாதல் (ஆதேசம்),குன்றல் (லோபம்), மிகுதல் (ஆகமம்) என்பன.மூன்று திரிபுகளுள், யாதானும் ஒன்று வரவேண்டிய இடத்தில் அதுவரப்பெறாதே இயல்பாகப் புணர்வது இயல்புபுணர்ச்சி எனப்படும். இதுவடமொழியில் பிரகிருதி பாவ ஸந்தி எனப்படும்.மெய்பிறிதாதலைத் திரிதல் எனவும், குன்றலைக் கெடுதல் எனவும்,மிகுதலைத் தோன்றல் எனவும், திரிந்த புணர்ச்சியை விகாரப் புணர்ச்சிஎனவும் நன்னூல் கூறும். (எ. ஆ. பக். 92)