போலி ஐகார ஒளகாரம்

அ இ, அய் – என்பன ஐகாரத்துக்குப் போலியாக வரும். ஐகாரச் சினைக்குப்போலியாக வரும் என்று தொல். கூறுதலின், சினை யெழுத்தாவது மொழியின்முதலில் வரும் எழுத்தைக் குறிக்காமல் இடையிலும் இறுதியிலும் வரும்எழுத்தைக் குறித்தலின், மொழி இடையிலும் இறுதியிலும் நிற்கும் ஐகாரமே‘அய்’ என வரும்’; மொழி முதற்கண் ‘அஇ’ ஐகாரத்துக்குப் போலியாகவரும்.அஉ என்பது ஒளகாரத்துக்குப் போலியாக வரும், ஒளகாரம் மொழி முதற்கண்வருமே அன்றி இடையிலும் இறுதியிலும் வாராமையின், இடையிலும் இறுதியிலும்வரும் ஐகாரத் துக்கு‘அய்’ போலியாவது போல, ஒளகாரத்துக்கு ‘அவ்’போலியாகும் என்று தொல்காப்பினார் குறிப்பிடவில்லை.வீரசோழியமும் நேமிநாதமும் மொழிமூவிடத்தும் ஐகாரத் துக்கு ‘அய்’போலியாகும் என்றும், ஒளகாரத்துக்கு ‘அவ்’ போலியாகும் என்றும் கூறின.ஆயின், “அஇ-ஐ,அஉ-ஒள” என்பதனை அவை குறிப்பிடவில்லை,(எ.ஆ.பக்.59,60)நன்னூலார் அஇ,அய்-என்பன ஐ போலவும், அஉ,அவ்-என்பன ஒள போலவும் ஆகும்என்று கூறியுள்ளார். பிற்காலத்து ஐ, ஒள-என்பனவற்றிற்கு அய் அவ்-என்றபோலிகளையும் எதுகைக்குக் கொண்டனர். (பி.வி.5உரை)