போலி இடைநிலைமயக்கம் ஆகாமை

போலிகளை இடைநிலை மயக்கத்தின் பாற்படுத்திப் பொருள் கூறுவாருமுளர்.இங்ஙனம் கூறிய எழுத்துக்கள் மொழிக்கு உறுப்பாகி ஒன்று நின்றநிலைக்களத்து மற்றொன்று அது போல மொழி நிரம்ப நிற்பதன்றி ஒன்றோடொன்றுமயங்கி இரண்டெழுத்தும் உடன் நிற்பது இன்மையானும், முதல் ஈறுஇடைநிலைகளுக்குப் புறனடையும் கூறிக் குறைவறுத்தமை யானும், ‘உறழாநடப்பன’ என்றும் ‘ஒக்கும்’ என்றும் ‘உறழும்’ என்றும் உவமஉருபுகொடுத்து இம் மூன்று சூத்திரம் கூறுத லானும், போலி இடைநிலைமயக்கத்தின்பாற் படாது என்க. (நன். 124 சங்கர.)