போலிமொழி

போலும் என்னும் சொல் இது. இச்சொல்லில் உகரம் கெட்டு, எஞ்சிய லகாரம்னகாரமாகிப்‘போன்ம்’எனச் செய்யுளில் ஈரொற்று உடனிலைச் சொல்லாய்வரும்போது ஈற்று மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரையாய்மகரக் குறுக்கமாம். (தொ. எ. 51 நச்.)