பொரு-தல் porudal, செ.குன்றா.வி. (v.t.)
1. தடவுதல்; to play, as a lute.
வீணைபொரு;தொழிலும்’ (சீவக. 1795);
2. கடைதல்; to churn.
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது( திருப்பு: 1);
3.ஒப்பாதல்; to resemble.
மலையெத்தனை அத்தனை…. பொருகிற்பன (கம்பரா. அதிகா. 150);
4. தாக்குதல்; to come in collision with, dash against, as waves.
‘பொருபுனறரூஉம்’ (சிறுபாண். 118);
5. முட்டுதல்; to reach extend.
விண்பொரு புகழ் (புறநா. 11);
6. பொருந்துதல்; to join, unite, combine.
பொய்பொரு முடங்குகை’ (சிலப். 15, 50);
7. பெருக்குதல்;அவற்றைப் பொருளதியறினானும் பொர (நன். 269, மயிலை); க. போர்