பொருள் poruḷ, பெ. (n.)
1. பருப்பொருள்; material substance, entity.
“விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல்” (சீவக. 1436);
2. சொற்பொருள்குடா); meaning, as of a word.
3. செய்தி,
matter.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் குறள், 423,
4. உண்மைக்கருத்து; true object.
வேதங் கண்ணிய பொருளெலாம் (கம்பரா. இரணிய, 1);
5. செயல்; object, affair.
“ஒருபொருள் சொல்லுவ துடையேன்” (கலித். 8);
6. மெய்மைநெறி; essential principle.
நவையறு நன்பொரு ளுரைமினோ (மணிமே. பதி, 87);
7. மெய்மை:
reality.
பொருள்சேர் புகழ்புரிந்தார் குறள், 5)
8. நன்கு மதிக்கப்படுவது; that which is important or moment.
பொருளே மன்ற பொருளே (குறுந். 174);
9. கல்வி:
learning.
10. அறிவு; knowledge: (பெரியபு. நமிநந்.10.);
policy belief.
பொய்யு மெய்யுமா மென்னும் பொருண் மேற் கொள்ளும் புரை நெறியார்
11. அறம்,
virtue.
துறத்தல் பொருளாமோ (சீவக. 2960);
12. பயன்:
reselt.
மெய்ப் பொருள் காண்ப தறிவு’ (குறள், 423);
13. வீடுபேறு; final bliss.
புகலூர் புகழப் பொருளாகுமே'(தேவா.640,8);
14. இறைவன்; god.
பொருளு மான்மாவுங் காட்டி’ (குமர. பிர.கந்தர்கலி. 27);
15. செல்வம்; wealth.
‘பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின்’ (நாலடி. 6);
16. பலபண்டம்(சூடா);; provision, stores.
17. பொன்;(சூடா);; gold.
18. மகன், (பிங்);
son.
தாரகனைப் பொருது பொன்று வித்தபொருளினை முன்படைத்து கந்த புனிதன்’ (தேவா. 622, 9);
19. கணங்கு; beauty-spot, as on woman’s breast.
‘யோகமும் பொருளுமீன்றபுணர்முலைத் தடங்கள்’ (சீவக. 460);
20. உவமேயம்,
the thing compared in a simile.
பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் (தொல். பொ. 284);
21. உறுதி,4 பார்க்க;see urudi.
அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கு பொருளினும்’ (திருக்கோ. 1, 2000);
22. மறுதலைப் பொருளுணர்வு; deduction or conclusion from premises given, inference from circumstances.
‘அபாவம் பொருளொப்பு’ (சி.சி. அனைவ, 1. மறைஞா);
23. அகமும் புறமுமாகிய திணைப்பொருள்; affairs of life, as topics of poetry, in two classes, viz., agam. puram.
24. பொருளாட்சி; science of political economy.
ஞாலத் தறம் பொருள் கண்டார்க ணில் (குறள், 141);
25. தலைமை (யாழ். அக.);:
headship, leadership.
26. கொள்கை; doctrine.
பொய்யு மெய்யுமா
மென்னும் பொருண்மேற்கொள்ளும் புரை நெறியார். (பெரியபு. நமிநந். 10
27. தந்திரம்; stratagem. device.
விரிக்க முயல்வார் புணர்ந்த பொருளாமிது (கம்பரா. சடாயு.155);
க. பொருளு. ம.பொருள். து.பொருலு,
[புல் → பொல் → (பொர்); – பொருள்]