பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறு வகைப் பெயருள்,பொருள் முதல் மூன்றும் முதலும், சினை முதல் மூன்றும் சினையுமாய்அடங்கும் என்பது அறிவித்தற்கு இம்முறை வைத்தார் என்க. (நன். 131மயிலை., இ.வி. 45 உரை)