தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் ஐந்தாவது.இருதிணை ஐம்பால் மூவிடங்களில் அமையும் சொற்கள் தம் பொருள்வேறுபட்டிசைப்பினும் அப்பொருள்களைக் கொள்ளவேண்டும் எனவும்,அகத்திணையியல் களவியல் கற்பியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொருள்களில்சற்று வேறுபட்டு வருவனவும் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும் எனவும்அமைத்து, சொல் உணர்த்தும் பொரு ளையும் தொடர்மொழிப் பொருளையும் ஒருங்கேதொகுத் துச் சொற்பொருளின் வழுவமைதியினையும் பொருளின் வழுவமைதியினையும்ஒருங்கே கூறும் இப்பொருளியல் 54 சூத்திரங்களை (நச். உரைப்படி)உடையது.