இருதிணை ஐம்பாற்பொருள்களின் பண்பும் செயலுமாகிய வற்றைஉணர்த்தற்குச் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற விதிகளான் ஆக்கமுற்றமைந்தசொற்கள், பொருளதிகாரத் துள் தலைவன் தலைவி முதலானோர் கூற்றுக்களுள்அமைந்து வருங்கால், அவை சொல்லிலக்கண நெறிபற்றி யமைந்த பொருளினின்றும்வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்கும்எனவும், அங்ஙனம் பொருள் பயத்தற்கும் அச்சொற்களே கருவியாக உள்ளமையான்அப்பொருளும் அவற்றிற்குரிய பொருளே எனவும், பொருளதிகாரத்துள்சொற்பொருளை அறியும் முறைமை கூறுதல் பற்றி இவ்வியல் பொருளியல் எனப்பட்டது. (தொ. பொரு. பாயிரம்)