பொருமு-தல் porumudal, செ.கு.வி. (v.i.)
1. துன்புறுதல்; to be distresset.
பூசலுண்டாமெனப் பொருமா’ கம்பரா. காட்சி 18)
2, விம்மியழுதல்; to choke with cryin sob.
போர்வலான் றடுப்பவும் பொருமி விம் னான்’ (கம்பரா. தைலமாட்டு. 41);
3. உப்புத to be bloated, as the body from wind disease.
4, பூரித்தல்; to be puffed up, a from elation.
பேருவகை மீக்கொண் பொருமினான் (உபதேசகா. விபூதி. 100
5. ஈரித்துப் பருத்தல்; to swell, to becom Soaked, as tile, new pot or Spong.
6. பொறாமைப்படுதல்; to be jealous, enviou.
[பொரு → பொருமு]