பொருமல் porumal, பெ. (n.)
1. அச்சம்,
fear.
பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே’ (கந்தபு. தருமகோ. 19);
2. துன்பம்; trouble.
போயதெம் பொரும லென்னா’ (கம்பரா. திருவவ. 25);
3. அழாது விம்முகை; sobbing.
‘ உயிர் போக்கிப் போக்கி புழக்கும் பொருமலான்’ (கம்பரா. மீட்சி, 208);
4. வயிற்றுப் பொருமல் (பதார்த்த 1358
flatulence, wind in the stomach.
5, பூரிப்ப; plumpness.
புந்தி யோங்கு மூவகை பொருமலோ’ (கம்பரா. மீட்சி. 22
6. பொறாமை; jealousy.
அவன் பேரி: அவனுக்குப் பொருமல் அதிகம்.
[பொருமு → பொருமல்]
பொருமல் porumal, பெ. (n.)
பொருமை யின்மை; impatence.
“பொருமலை நானெங்கே யுடக்குவேன்”(தெய்வச் விறலிவிடு.239);
[பொருமு → பொருமல்]
இ. பெ.பா. ஈறு.