பொருப்பன் poruppaṉ, பெ. (n.)
1. குறிஞ்சி நிலத்தலைவன்; chief of a hilly tract.
2. குறிஞ்சி நிலவேடன்; hunder of the hills.
வேலுடைப் பொருப்பாங்குணர்வுற (கந்தபு. கடவுள்வா.12);.
3. பாண்டியன்(கலித்.36);: (பொதியமலைக் குரியவன்);
pandya King, as lord of podiyam.
4. மலைக்குரியவன்; lord of a hill.
பொருப்பனைப் புனலாளொடு புன்சடை அருப்பனை” (தேவா. 781, 9);
5. பனிமலை (இமயமலை);; the Himalayas.
பொருப்பன் மங்கைபங்கனை (தேவா. 1188, 6);
[பொருப்பு→ பொருப்பன்]