பொருந்து-தல்

பொருந்து-தல் porundudal, செ.கு.வி. (v.i.)

   1. மனம் இசைவாதல்; to agree, consent.

கொணர் குவா யெனப் பொருந்தினன்’ (கம்பரா. மருத்து. 85);

   2. தகுதியாதல்; to be suitable, proper.

   3. அமைதல்; to abide.

அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43);

   4. உடன்ப்டுதல்; to make a contract, an agreement.

   5. நெருங்குதல்; to come into close.

பொருந்தவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13,);

   6. நிகழ்வித்தல்; to occur happen.

புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண.131);

   7. நிறைவேறுதல்; to be constituted, made.

பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான்’ (கம்பரா. இரணிய, 18);

க.பொருது

 பொருந்து-தல் porundudal, செ.குன்றா.வி (v.t.)

   1. கலத்தல்; to combine with.

பண்பொருந்த விசைபாடும் (தேவா. 268,5

   2. அடைதல்; to reach.

வந்தடி பொருந்த முந்தை நிற்பின் (புறநா.10);

   3. அளவளாவுதல்

 to associate cordially.

மணிமேகலை.. பொருந்தின ளென்னும் பான்மை: கட்டுரை'(மணிமே.23.46);

     [பொரு → பொருந்து →தல்]