பொருந்தில்‌

பொருந்திய (நெருங்கிய) இல்நிறைந்த ஊர்‌ பொருந்தில்‌ எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌. அல்லது அக்கம்பக்கது ஊரினரின்‌ வழக்குகளைத்‌ தீர்த்து வைப்போரின்‌ பொருந்தவைப்போரின்‌ இல்‌ அமைந்திருந்த ஊர்‌ என்னும்‌ பொருளில்‌ பொருந்தில்‌ எனப்‌ பெயர்‌ பெற்றதோ என்றும்‌ எண்ணலாம்‌. இளங்கீரனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரினர்‌. ஆகவே பொருந்தில்‌ இளங்கீ‌ரனார்‌ எனப்பெயர்‌ பெற்றிருந்தார்‌. புறநானூற்றில்‌ 53 ஆம்‌ பாடலைப்‌ பாடியவர்‌ இவ்வூர்ப்‌ புலவர்‌ பொருந்தில்‌ இளங்கீரனாரே.