பொருநன்

பொருநன் porunaṉ, பெ. (n.)

   1. வீரன்; warrior, hero.

பாலறிமரபிற் பொருந கண்ணும் (தொல் . பொருள். 74);

   2. திண்ணியன்; strong, robust, valiant mar.

   3. அரசன்:

 king.

அறந்துஞ் சுறந்தைப் பொருநனை’ (புறநா. 58.);.

   4. குறிஞ்சி நிலத்தலைவன்(பிங்.);; chief of a hilly tract.

   5. படைத்தலைவன்; commander of an army, general (பிங்);

   6. உவமிக்கப்படுவோன்:

 one who is the standard of comparison.

போர்மிகு பொருந’ (திருமுரு.276.);

   7. தலைவன் (பிங்);; leader.

   8. பகைவன்; foe, enemy;

பொருநரைப் பெறா. பஞ்சவ ரோறே’ (புறநா. 58);

     [பொரு→ பொருநன்]