பொருத்தம் poruttam, பெ. (n.)
1. பொருந்துகை; fitting, adaptation.
2. தகுதி,
propriety.
பொய் முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று’ (திருக்கோ.356);
3. இணக்கம்; harmony, concord.
அவனுக்குமிவனுக்கும் எப்போதும் பொருத்தமிலைலை.
4. உடன்படிக்கை(வின்);,
agrement, contract.
5, மணமக்களின் பொருத்தவிணக்கம்(வின்.);; favourableness or agreement of heroscopes of the two parties to the married.
6. மனநிறைவு(வின்.);; satisfaction.
7. சரிபார்க்கை:
verifying.
8. நோயைத் தடுக்க நஞ்சினைத் தோலுட் செலுத்துகை; innoculation.
[ பொருந்து-→ பொருத்தம் ]