வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வேற்றுமையுருபு மறைந்து நிற்க,அவ்வுருபின் பொருள் அவ்வுருபு மறைந்தவழியும் திரிபுறாது நிற்க,வேற்றுமையுருபு தொக்கு நிற்கும் நிலைமொழி, பெரும்பான்மை வருமொழிமுதலெழுத்தாம் வன்கணத் தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணரும்புணர்ச்சி.பொதுவாகப் பொருட்புணர்ச்சி என்பது அஃறிணைப் பெயர் களுக்கேகொள்ளப்படும். தொல். உயர்திணைப்பெயர் களையும் விரவுப்பெயர்களையும்விதந்து ஓதியே முடிப்பார் என்பது. (தொ.எ. 153 நச். உரை)உருபு தொக்கு நின்ற பொருட்புணர்ச்சியே எழுத்ததிகார இறுதி இயல்கள்மூன்றன்கண்ணும் பெரும்பாலும் கூறப்பட் டுள. (203 நச். உரை)