பொருக்கு

பொருக்கு porukku, பெ. (n.)

   1. பருக்கை; grain of boiled rice.

காக்கைக்குச் சோற்றிலோர் பொருக்குங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா. vi, ஆற்றாமை, 3,1);

   2. சேறுமுதலியன உலரும் போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; flake, skin, thin layer that peels off, scale.

பூசுகந்தம் தனத்திற் பொரிந்தது…. பொருக்கெழும்பி’ (தனிப்பா., 381, 27);

   3. மரப்பட்டை; bark.

வெள்ளி லோத்திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்து (சீவக. 622);

   4. பொருக்கு மண் (யாழ்.அக.); . பார்க்க;see Porukku-maŋ.

     [ பல் → பரு → பருக்கு → பொருக்கு ]

 பொருக்கு porukku, பெ. (n.)

   பல்ஊத்தை ; tartar.

   2. சொறிசிரங்கு; crust.

     [பல் → பரு → பருக்கு → பொருக்கு]