பொரி-தல் poridal, செ.கு.வி. (v.i.)
1. பொரி யாதல்; to be parched, baked.
‘செந்தீ யினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல’ (பிரபுலிங், பிரபுதே. 54);
2. வறுபடுதல்(வின்);; to be roasted, fried, as grain.
3. Élilo; to be blackened by fire, singed, scorched or burnt by the sun.
பொரிந்தன கலவைகள்’ (கம்பரா, மிதிலைக் காட்50);
4. விரைவாகப் பேசுதல் (கொ.வ.);; to speak fluently.
5. அலப்புதல்(வின்);; to blab.
6. உப்பு முதலியன தரையிற்பூத்தல்(வின்);; to form as a thin stratum or layer of salt.
7. படிதல்; togather, as a coat of dust on the body.
8. மெல்லென ஒலித்தல்(வின்);; to crack, pop, make slight, reports, as musketry.
9. வாணப்பொரி மிகுந்து சொரிதல்; to throw out sparks, as Roman candle or a whirling firebrand.
பொரிந்தோடின. கருங் கோளிக் கிளையான் விடு சரமே. (கம்பரா. நிகும்பலைய. 112,);
10. பொருக்குவெடித்தல் (யாழ்.அக);
to be dried up and shrivelled as the skin.
[பல் – பர் – பரி – பொரி]
க. புரி