பொய்கை poykai, பெ. (n.)
1. இயற்கை யிலுண்டான நீர்நிலை; natural spring or pond.
‘வாவியும் பொய்கையுங் கண்டீர்.’ (சீவக.337);
2. நீர்நிலை; tank.
“பொய்கைவாயிற் புனல்பொரு புதவின்” (பதிற்றுப். 27);
3. பொய்கையார்,1 பார்க்க களவழிப்பா முன்செய்தபொய்கை (தொல்.பொ.91);
4. பொய்கையாழ்வார் பார்க்க பொய்கை பூதம் பேய் (பிர.யோத. 11, 9);
[பொய் → பொய்கை]
பொய்கை poykai, பெ. (n.)
கோட்டான்
a kind o owl (யாழ்.அக.);.