‘ஆழி யிழைப்பப் பகல்போம்’ என்ற எழுத்தானந்த எடுத்துக் காட்டுவெண்பா பொய்கையார் என்ற பழம்புலவரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக்.558, 45) மூன்றாமெழுத்து ஒன்று எதுகைக்கும் (பக். 143),முற்றியலுகரத்தான் இற்ற பிறப்பு எனும் வாய்பாட்டு ஈற்றுச்சீர் அமைந்தபாடற்கும் (பக். 231), வெண்பா இலக்கணத்தில் திரிந்து ஆரிடப் போலியாய்அமையும் பாடல்களுக்கும் (பக். 369, 371) இவருடைய பாடல்கள்எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள.