பொம்மல்

பொம்மல் pommal, பெ. (n.)

   பொலிவு; fine appearance.

ஒளிர் பொன்னனைய பொம்மணிறம் (கம்பரா. உருக்கா. 68);

   2. மிகுதி (திவா.);; abundance, copiousness.

     “புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55);

   3. பருமன்; size, thickness, plumpness.

பொம்மல் வனமுலை (சீவக. 2717);

   4. கூட்டம்; multitude, as of stars.

     “பொலிந்தன உடுவின் பொம்மல்” (கந்தபு. காசிபன்புல. 28);

   5. சோறு:

 boiled rice.

     ‘இறடிப் பொம்மல் பெறுகுவீர் (மலைபடு. 169); (பிங்);

   6. மகிழ்ச்சி:

 exultation.

போய்வருங் கரும முற்றிற் றென்பதோர் பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3);

     [ பெரு → பெருமு → பொருமு → பொம்மல்]

 பொம்மல் pommal, பெ.(n.)

   பொம்மை; puppet, effigy.

     “பொம்மலாட்டுவிக்கும் தோலுருப் போல்’ (விறலிவிடு.);

     [ போன்மை → பொம்மை→ பொம்மல் ]

 பொம்மல் pommal, பெ.(n.)

   பொம்மை; puppet, ettigy.

     “பொம்ம லாட்டுவிக்கும் தோலுருப்போல” (விறலிவிடு);.

த.வ. தோற்பாவை

     [Skt. pratima – Pkt. bomma- → த. பொம்மல்.]