பொந்து pondu, பெ. (n.)
1. மரப்பொந்து
hole recess, hollow in a tree.
ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13, 2);
2. எலி முதலியவற்றின் வளை,
hole in th: ground, as of rat or snake.
3. பல்லி (பிங்.);.
lizard.
தெ.பொந்த
[ பொத்து → பொந்து ]
பொந்து pondu, பெ.(n.)
கைத்தறி நெசவில் பல சிலுப்பைகள் சேர்ந்தது; a group of Ciluppai in handloom.
[பொல்- பொந்து]