பொத்து

பொத்து pottu, பெ. (n.)

   1. மூடுகை; Covering, Stopping closing up.

   2. அடைப்பு

   3. பொத்தல்;அருச்சுனன் அம்பினால் பலபொத்துப் பொத்தினான்.

   4. பொந்து,

 hole rat-hole, small cavity, hollow in a tree. (பிங்.);

     ‘முதுமரப் பொத்தில் (புறநா.364.11);.

   5. வயிறு:

 stornach.

     “பொத்தடைப் பான் பொருட்டால் மையல் கொண்டீர் (தேவா.188.6);

   6. தவறு; fault, defect, blemish.

     “பொத்தினண் பிற்பொத்தியொடு (புறநா.212.);

   7. தீயொழுக்கம்,

 evil, crime, immorality (w.);

   8. பொய்; falsehood lie.

புல்லறிவு கொண்டு பல பொத்து மொழி புத்தா (திருவாத.பு. புத்தரை,77);

   9. பல்லி:

 lizard (பிங்);;

     [புல்→ பொல்→ பொத்து]